பணியின்போது ரெயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி - ராகுல் காந்தி கண்டனம்

6 months ago 20

புதுடெல்லி,

பீகார் மாநிலம் பரோனி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, ரெயில்வே ஊழியர் ஒருவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரெயில்வே துறையில் போதிய ஆட்சேர்ப்பு நடைபெறாததே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் மோடி அவர்களே? நீங்கள் அதானியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறீர்கள். இந்திய ரெயில்வேயின் நீண்ட கால அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் போதிய ஆட்சேர்ப்பு நடைபெறாதது ஆகியவற்றின் விளைவுதான் இந்த பயங்கரமான விபத்து" என்று பதிவிட்டுள்ளார்.

आम लोग कब safe होंगे, मोदी जी? आप तो बस 'एक' अडानी को safe करने में लगे हुए हैं।ये भयावह तस्वीर और खबर भारतीय रेल की लंबी लापरवाही, उपेक्षा और जान बूझकर की गई कम भर्तियों का परिणाम है। pic.twitter.com/JEfiMXvY53

— Rahul Gandhi (@RahulGandhi) November 9, 2024
Read Entire Article