மதுரை: மதுரை தெப்பக்குளம் குற்றத்தடுப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றிவர் கதிரவன் மார்க்ஸ்(45). தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால், இவருக்கு விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் மாற்றுப்பணி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி அவர் மீனாட்சி அம்மன் கோயில் அருகே கடந்த சில தினங்களாக பணி செய்து வந்தார். கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் மதுரைக்கு வந்தார்.
அவரை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அப்போது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த கதிரவன் மார்க்ஸ், அவசர விடுப்பு எடுத்துக் கொண்டு, தவெக கட்சி கரை வேட்டி, துண்டு அணிந்து, நடிகர் விஜயை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் காவல்துறை வட்டாரங்களில் வைரலாக பரவியது. மேலும், போலீஸ் கமிஷனர் லோகநாதன் பார்வைக்கும் சென்றது. இதுகுறித்து விசாரணை நடத்திய கமிஷனர், கதிரவன் மார்க்சை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
The post பணியின்போது தவெக வேட்டி, துண்டுடன் நடிகர் விஜய்யை வரவேற்க சென்ற ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.