பிஜாப்பூர்: தெலங்கானா மாநிலம் எல்லையை ஒட்டியுள்ள சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் காரெகுட்ட மலைப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 15க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் இன்று காலை துப்பாக்கிச் சண்டை தொடங்கியது .
பஸ்தார் பகுதியில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கூறப்படும் தற்போதைய ஆபரேஷன் சங்கல்ப், மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG), பஸ்தார் போராளிகள், சிறப்புப் பணிக்குழு (STF), மாநில காவல்துறையின் அனைத்து பிரிவுகள், மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் அதன் உயரடுக்கு பிரிவு CoBRA உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 24,000 பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.