பணிக்கு வராத 55 டாக்டர்கள் டிஸ்மிஸ்: ஆந்திர அரசு அதிரடி உத்தரவு

14 hours ago 1

திருமலை: ஆந்திராவில் எவ்வித அறிவிப்பும் இன்றி பணிக்கு வராத 55 அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும், மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், ஓராண்டுக்கும் மேலாக எந்த அனுமதியும் பெறாமல், விடுப்பு கடிதம் வழங்காமல் பணிக்கு வராமல் இருப்பதாக சுகாதாரத்துறைக்கு பல புகார்கள் வந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் மொத்தம் 55 மருத்துவர்கள் எவ்வித அறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் விடுமுறையில் இருப்பது தெரியவந்தது.

இதில் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவக்கல்லூரியில் மட்டும் 9 டாக்டர்கள் பணிக்கு வரவில்லைாயம். இவ்வாறு பணிக்கு வராத குழந்தை மருத்துவ உதவி பேராசிரியர் வெங்கடராவ், எலும்பியல் உதவி பேராசிரியர்கள் சரஸ்வதி, கிரண்குமார், மதுரிமாநாயுடு, குழந்தை மருத்துவ உதவி பேராசிரியர் நளினி, நரம்பியல் துறை உதவி பேராசிரியர் சந்திரசேகர், பொது மருத்துவ உதவி பேராசிரியர் லாவண்யா, ரேடியோ நோயறிதல் உதவி பேராசிரியர் கார்த்திக், இருதயவியல் உதவி பேராசிரியர் ஸ்ரீகாந்த் உள்பட மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் முன்னறிவிப்பு இன்றி பணிக்கு வராத 55 மருத்துவர்களை பணி நீக்கம் செய்து நேற்று முன்தினம் மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

The post பணிக்கு வராத 55 டாக்டர்கள் டிஸ்மிஸ்: ஆந்திர அரசு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article