பணி நிரந்தரம் செய்ய கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

3 months ago 9

 

புதுக்கோட்டை, பிப்.15: தமிழ்நாட்டில் உள்ள உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் ரூ.57,700 வழங்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும், 12 மாதமும் ஊதியம் வழங்கிட வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், கௌரவ விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திடல் வேண்டும்.

கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றும் காலத்துக்கான பண பலன்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம், அரசு ஊழியர் காப்பீட்டு ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயிலில் அக்கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.

The post பணி நிரந்தரம் செய்ய கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article