நெல்லை: பணகுடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.36 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் காவிரி, ராமகிருஷ்ணன், செல்வகுமார், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசிடம் இருந்து தப்பியோட முயன்றதில் கையில் முறிவு ஏற்பட்டு 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post பணகுடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளை சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.