பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்; மேலும் 50 பேருக்கு சம்மன்

4 months ago 16

சென்னை: பண மோசடி வழக்கின் விசாரணைக்காக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். இந்த வழக்கில் மேலும் 50 பேருக்கு சம்மன் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Read Entire Article