பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே பாஜ பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியை சேர்ந்தவர் சரண்யா(35). இவரது முதல் கணவர் மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2021ம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்து விட்டதால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கழுகப்புலிக்காட்டை சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது உதயசூரியபுரத்தில் வாடகை வீட்டில் பாலனுடன் சரண்யா வசித்து வந்தார்.
உதயசூரியபுரம் கடைத்தெருவில் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையை பாலன், சரண்யா நடத்தி வந்தனர். நேற்றிரவு கடையை பூட்டி விட்டு பாலன், சரண்யா வீட்டுக்கு புறப்பட்டனர். சரண்யாவின் மகன்களுடன் இரு சக்கர வாகனத்தில் பாலன் வீட்டுக்கு ெசன்றார். கடையில் இருந்து வீடு ஒரு கிமீ தொலைவே இருப்பதால் சரண்யா நடந்து சென்றார். வீட்டுக்கு அருகில் சந்து பகுதியில் சரண்யா நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து சரண்யாவை கழுத்து மற்றும் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சரண்யா தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து சரண்யாவை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யா முதல் கணவருடன் மதுரையில் வசித்த போது, மதுரை மத்திய தொகுதி பாஜ மகளிரணி செயலாளராக இருந்துள்ளார். தற்போது பட்டுக்கோட்டை பாஜகவில் உள்ளார். மதுரையில் இருந்த போது மேலூரைச் சேர்ந்த டிராவல்ஸ் நடத்தி வரும், பாஜ மாநில நிர்வாகி ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
The post பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்: பாஜ பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை appeared first on Dinakaran.