பட்டு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 11 பட்டு விவசாயிகளுக்கு ரூ.8.25 லட்சம் பரிசுத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

13 hours ago 1

சென்னை: பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவில் 2 சிறந்த பட்டு விவசாயிகளும், 3 சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளர்களும், 3 சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களும், 3 சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 11 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ரூ.8.25 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேக்கப், 3ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்குமரனுக்கும்,

மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுநாதா, 2ம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் நாகராஜ், 3ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்த முர்த்திக்கும், மாநில அளவில் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது மதீனுல்லாவுக்கும், 2ம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், 3ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுபத்ராவுக்கும்,

மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், 2ம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேதவள்ளி, 3ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரொசாரியோ லாசர் என மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை 11 பட்டு விவசாயிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைச் செயலாளர் அமுதவல்லி, பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் சாந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பட்டு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 11 பட்டு விவசாயிகளுக்கு ரூ.8.25 லட்சம் பரிசுத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article