பட்டியலின மாணவரை ஐஐடியில் அனுமதிக்க உத்தரவு

3 months ago 21

டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வறுமை காரணமாக ரூ.17,500 கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானதால் ஐஐடி சேர்க்கையில் இருந்து மாணவர் நீக்கப்பட்டார். ஐஐடி சேர்க்கையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மாணவர் வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் நிவாரணம் கிடைக்காததை அடுத்து மாணவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். மாணவர் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உடனடியாக அவருக்கு சேர்க்கை வழங்க தன்பாத் ஐஐடிக்கு உத்தரவிட்டது. இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நன்றாக கல்வி பயில மாணவருக்கு வாழ்த்து தெரிவித்து உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

The post பட்டியலின மாணவரை ஐஐடியில் அனுமதிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article