தமிழகத்தில் 13 மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

2 hours ago 1

சென்னை: எல்லையின்றி இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? 13 மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை புதிதாக திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆறுகள், மலைகள், சமவெளிகள் என அனைத்து நிலைகளிலும் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும், அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article