
சென்னை,
சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயர் ஆர்.பிரியா தலைமை வகித்தார். இந்த மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாடல்ஸ் சாலையை எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்யவும் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.