பட்டாசு வெடிப்பதில் தகராறு - கொலையில் முடிந்த விபரீதம்..

2 months ago 13
சென்னை தாம்பரம் அருகே, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறின்போது, கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்ட மோசஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களான மோசஸுக்கும், கல்யாணராமனுக்கும் இடையே தீபாவளி அன்று வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில், கல்யாணராமன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து  மோசஸின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே கல்யாணராமனை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், அதனை தற்போது கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
Read Entire Article