பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!!

2 weeks ago 5

மதுரை : பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு டிச.2ல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எட்டக்காபட்டி பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் மனைவியர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனுவில், “தங்களுக்கு போதிய இழப்பீடு, அரசு சத்துணவு மையம், விடுதிகளில் வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கும் பின் மனு மீது உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.பட்டாசு ஆலை விபத்துக்கு உரிமையாளர் காரணமாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடுகிறோம். பாதித்த குடும்பங்களுக்கு அரசுப் பணி, விதவை ஓய்வூதியம் மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும். ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம் உள்ளிட்ட விதிகளை கடுமையாக பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி, வெடி பொருள் சட்டம் உள்ளிட்ட விதிகளையும் அரசு முறையாக பின்பற்ற வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article