மதுராந்தகம் துணை மின் நிலையம் அருகே பொது வேலை நிறுத்த விளக்க ஆயத்த கூட்டம்

9 hours ago 5

மதுராந்தகம்: மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட கிளையின் சார்பாக பொது வேலை நிறுத்தம் குறித்த ஆயத்த கூட்டம் மதுராந்தகம் துணை மின்நிலைய அலுவலகம் அருகே நேற்று நடந்தது. சங்க நிர்வாகி கே.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். என்.நேருஜி முன்னிலை வகித்தார். டி.பெருமாள், எஸ்.சங்கர் ஆகியோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில், பொதுத்துறை அரசு சொத்துகளை அதானி, அம்பானிக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஒப்பந்த தினக்கூலி, அவுட் சோர்ஸிங், பயிற்சியாளர் முறை போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பழைய பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து வரும் 9ம் தேதி(புதன்கிழமை) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும், எனவ

The post மதுராந்தகம் துணை மின் நிலையம் அருகே பொது வேலை நிறுத்த விளக்க ஆயத்த கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article