பட்டப்படிப்பில் புதிய கல்விக்கொள்கை.. கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. விடுத்த அறிவுறுத்தல்

5 hours ago 4

சென்னை,

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலாளர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய கல்விக்கொள்கை 2020, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த கல்விக்கொள்கையானது, பட்டப்படிப்புகளுக்கான கால அளவுகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குகிறது. பட்டப்படிப்பில் பல்வேறு நுழைவுகள், பல்வேறு வெளியேறுதல், முன் கல்விக்கு அங்கீகாரம் வழங்குதல் என அம்சங்கள் உள்ளன. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளில் புதிய கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பின்பற்றி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article