‘படையப்பா’ கைது

23 hours ago 2

வில்லிபுத்தூர், பிப்.21: திருத்தங்கல் ரயில்வே நிலையத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருத்தங்கல் ரயில்வே நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு பேரை அரிவாளால் வெட்டி பணம் பறித்து சென்ற வழக்கில் ஏற்கனவே மூன்று பேரை வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய விஜயபாண்டி என்ற படையப்பா(29) என்பவரை வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது சிவகாசி மற்றும் திருத்தங்கல் காவல் நிலையத்தில் பல்
வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ‘படையப்பா’ கைது appeared first on Dinakaran.

Read Entire Article