படைப்பாற்றலைக் கொண்டாடும் சக்திவாய்ந்த ஊடகம் - பிரதமர் மோடி வானொலி தின வாழ்த்து

3 hours ago 3

புதுடெல்லி,

உலகளவில் சமூகம் மற்றும் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் வானொலியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் உலக வானொலி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலக வானொலி தின வாழ்த்துக்கள்! வானொலி பலருக்கு காலத்தால் அழியாத உயிர்நாடியாக இருந்து வருகிறது. தகவல் அளித்தல், ஊக்கப்படுத்துதல் மற்றும் மக்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை வானொலி செய்து வருகிறது.

செய்தி மற்றும் கலாசாரம் முதல் இசை மற்றும் கதைசொல்லல் வரை, படைப்பாற்றலைக் கொண்டாடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் இது. வானொலி உலகத்துடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இந்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கருத்துக்களையும், உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article