பஞ்சாப்: விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற 3 பெண்கள் பலி

6 months ago 23

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பத்திண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஹரியானாவின் தோஹானாவுக்கு விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக  52க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் சற்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்து சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயனித்த விவசாய அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண் ஆர்வலர்கள் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article