பஞ்சாப் மாநிலத்தில் 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

5 days ago 4

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கக்கர் கிராமத்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை கண்டுபிடித்தனர்.

அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 கிலோ எடையுள்ள ஹெராயின் மற்றும் 900 கிராம் எடையுள்ள மற்றொரு போதைப்பொருளையும் போலீசார் மீட்டனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமந்தீப் சிங்கைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article