
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 22). இவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நண்பர்கள் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தின்போது அடையாளம் தெரியாத 3 பேர் விமல் மற்றும் ஜெகன் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் விமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ஜெகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட இருவரின் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்