பஞ்சாபில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாகத் தகவல்!

3 months ago 8

பஞ்சாப்: பஞ்சாபில் காலியாக உள்ள லூதியானா சட்டமன்றத் தொகுதியில், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 02ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தொடக்கம் முதலே டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தது. இறுதிகட்ட முடிவின் படி பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 வருடங்களுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததை அடுத்து டெல்லி முதல்வர் அதிஷி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பஞ்சாபில் காலியாக உள்ள லூதியானா சட்டமன்றத் தொகுதியில், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்த நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. டெல்லி தேர்தல் தோல்விக்கான காரணங்கள், 2027-ல் பஞ்சாப் தேர்தலுக்கான உக்திகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

 

The post பஞ்சாபில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாகத் தகவல்! appeared first on Dinakaran.

Read Entire Article