சண்டிகர், மார்ச் 2: பஞ்சாப் மாநிலம் 3 மாதங்களில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் சுமார் 750 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த நடவடிக்கையில் சுமார் 12ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். 4 மணி நேரம் மாநிலம் முழுவதும் நடந்த இந்த சோதனை தொடர்பாக 232 வழக்கு பதிவு செய்யப்பட்டது. 290 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 8.14 கிலோ ஹெராயின், 1.21 கிலோ அபின், 3.5 கிலோ கஞ்சா, 19 கிலோ கசகசா, 700 கிராம் சரஸ், 16,238 போதை மாத்திரைகள், ₹8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post பஞ்சாபில் 750 இடங்களில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.