பச்சைப்பயிறு சாதம்

2 months ago 12

தேவையான பொருட்கள்

பச்சைப்பயிறு – 100 கிராம்
அரிசி – 1 குவளை (டம்ளர்) (250 கிராம்)
பெரிய வெக்ன்காயம் – 2
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
எலுமிச்சை – 1/4 பழம்
பூண்டு – 10 பல்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் வைத்து நன்கு கழுவிக் கொள்ளவும்.பச்சைபயிறை லேசாக (எண்ணெய் இல்லாமல்) வறுத்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயம், தக்காளியை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.அனைத்தும் நன்றாக வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் முக்கால் பங்கு வேகவைத்த பச்சைப்பயிறை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.அதனுடன் தண்ணீர் 4 குவளை (டம்ளர்) (ஒரு பங்குக்கு 3 பங்கு) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவி வைத்துள்ள அரிசியைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும்.5 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, ஆவி அடங்கியதும், எலுமிச்சம்பழ சாற்றைச் சேர்த்து சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும்.

The post பச்சைப்பயிறு சாதம் appeared first on Dinakaran.

Read Entire Article