பக்தியில் மூழ்கிய மனைவியை தீ வைத்து கொளுத்த முயன்ற கணவன்

2 months ago 13
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மனைவி அதிக பக்தியில் மூழ்கியதால் ஆத்திரமடைந்த கணவர், பெட்ரோலை ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்கனாங்குடியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவரின் மனைவி ஹேமா பிந்து அடிக்கடி வீட்டில் சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இது ராஜேந்திர பிரசாத்திற்கு பிடிக்காத நிலையில், நேற்றிரவு வழக்கம்போல சாமி கும்பிட்டுக்கொண்டுருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு, பைக்கிற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஹேமா பிந்து மீது வீசியதாகக் கூறப்படுகிறது. பூஜை அறை விளக்கில் இருந்த தீ ஹேமா பிந்து, ராஜேந்திர பிரசாத் மீது பற்றியதால் இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பாற்றச் சென்ற பொறியியல் மாணவர்களான 2 மகன்களுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்ட நிலையில், 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article