பக்தர்கள் மீது கார் மோதல் மதுரையை சேர்ந்த மேலும் ஒருவர் பலி

2 weeks ago 1

ஒட்டன்சத்திரம், ஜன. 23: ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த மேலும் ஒரு பாதயாத்திரை பக்தர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பழைய கன்னிவாடி கரிசல்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரன் (21). இவர் கடந்த 16ம் தேதி தனது அத்தை மகள் துர்காவை பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கன்னிவாடியில் இருந்து காரில் சென்றார். ஒட்டன்சத்திரம் சாலைபுதூர் காளியம்மன் கோயில் அருகே வந்த போது புவனேஸ்வரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் பாய்ந்தது.

இதில் பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த மதுரை, வடிவேலன் தெரு பகுதியை சேர்ந்த அடைக்கல ராஜா (27), மதுரை, மீனாட்சிபுரம் 3வது தெரு பகுதியை சேர்ந்த கேசவன் (17), இவரது தந்தை அழகர் (45) ஆகியோர் மீது மோதியது. இதில் அடைக்கல ராஜா, கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அழகர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி, அழகர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பக்தர்கள் மீது கார் மோதல் மதுரையை சேர்ந்த மேலும் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article