டெல்லி: டெல்லி நிர்வாசன் சதனில் இன்று (06.05.2025) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் டாக்டர்.சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர்.விவேக் ஜோஷி ஆகியோர் நிர்வாசன் சதனில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதியுடன் கலந்துரையாடினர்.
இந்திய தேர்தல் ஆணையமானது தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் நேரடியாக கலந்துரையாடும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரடியாக தேர்தல் ஆணையத்துடன் தங்கள் ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் குறைகளை பகிர்வதற்கான வாய்ப்பு வழங்குவதன் மூலம் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கான தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்த முயற்சி அனைத்து பங்குதாரர்களுடனும் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப தேர்தல் செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் ஆணையத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
இதற்கு முன்னர், இந்தியா முழுவதும் 4.719 அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளால் (CEO) 40 கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் (DEO) 800 கூட்டங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் (ERO) 3,879 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 28,000 க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
The post பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்கள் கலந்துரையாடல் appeared first on Dinakaran.