பகுஜன் சமாஜ் கட்சி மு.தலைவர் பிறந்தநாள் விழா

2 hours ago 1

 

ஜெயங்கொண்டம், பிப்.1: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 53வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்தி சாம்பவர், துணை செயலாளர் ஹஜ்ஜி முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டமன்றத் தொகுதி இணை தலைவர்கள் அருள்மணி, வீரமுத்து, ஒன்றிய தலைவர்கள் ஜெயங்கொண்டம் மருத்துவர் கொளஞ்சி ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர் குமார், ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். லட்சுமணன் மணிமாறன் சந்துரு சுபாஷ் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அன்புதாசன் வரவேற்றார். ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் கங்காசலம் நன்றி கூறினார்.

The post பகுஜன் சமாஜ் கட்சி மு.தலைவர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Read Entire Article