அபுஜா: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு எரிபொருட்களை ஏற்றி கொண்டு டேங்கர் லாரி சென்றது. மாஜியா நகரில் உள்ள பல்கலைக்கழகம் அருகே வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி சாலையில் கவிழ்ந்தது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் ஓடி வந்தனர். கீழே கொட்டி கொண்டிருந்த பெட்ரோலை பிடித்து கொண்டிருந்தனர். அப்போது டேங்கர் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 140 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயமடைந்தனர். நைஜீரியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 1,531 டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளாகின.இதில், 535 பேர் உயிரிழந்துள்ளனர்.
The post நைஜீரியாவில் பயங்கரம் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 140 பேர் பலி appeared first on Dinakaran.