சென்னை: நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான் என்று இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில் கூறியதாவது; நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை என அனைத்திலும் கரைகண்டவர். தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆக.2ஆம் நாளுக்காக காத்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்: இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.