புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நேபாள நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேபாள அரசு அங்குள்ள சட்டப்பேரவையைக் காண புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்தது. நேபாள அரசின் அழைப்பின் பேரில் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் ஒரு வார கால சுற்றுலா பயணமாக நேபாளம் செல்கின்றனர். இதன்படி எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். அங்கு தங்கும் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாள தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.