நேபாள மலையில் மாயமான 5 ரஷ்ய மலையேற்ற வீரர்கள் பலி: 7000 மீட்டர் உயரத்தில் சடலங்கள் மீட்பு

3 months ago 19

காத்மண்ட்: நேபாளத்தில் உள்ள தவ்ளகிரி மலை 8,167 மீட்டர் உயரமானது. இது உலகிலேயே ஏழாவது உயரமான மலையாகும். இங்கு ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் ஞாயிறன்று மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இவர்கள் திடீரென மாயமானார்கள். இதனை தொடர்ந்து மாயமான வீரர்களை தேடும் பணி தொடங்கியது. அப்போது சுமார் 7700 மீட்டர் உயரத்தில் மலையேற்ற வீரர்கள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட உள்ளது. அவ்வளவு உயரத்தில் இருந்து இறந்தவர்களின் சடலங்கள் எப்போது, எப்படி கீழே கொண்டுவரப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதனிடையே ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்ட எல்லையான சூர்யகுண்டா பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்த போலந்து சுற்றுலா பயணி சோவின்ஸ்கா அக்னிஸ்கா(23) உயிரிழந்துள்ளார்.

The post நேபாள மலையில் மாயமான 5 ரஷ்ய மலையேற்ற வீரர்கள் பலி: 7000 மீட்டர் உயரத்தில் சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article