விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, நல்லூர், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, வேப்பூர் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தானிய பயிர்களை இங்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது விருத்தாசலம் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் முடிவடைந்து அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று மட்டும் 7 ஆயிரத்து 500 நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பிபிடி (புதிய) நெல் ரகம் அதிகபட்சமாக ரூபாய் ஆயிரத்து 699க்கும், குறைந்தபட்சம் ஆயிரத்து 450 ரூபாய்க்கும் சராசரியாக ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சி.ஆர்- 1009 என்ற நெல் ரகம் அதிகபட்சமாக ஆயிரத்து 512 ரூபாய்க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் மணிலா அதிகபட்சமாக 8 ஆயிரத்து 479 ரூபாய்க்கும், எல் அதிகபட்சமாக 12 ஆயிரத்து 289 ரூபாய்க்கும், உளுந்து அதிகபட்சமாக 8 ஆயிரத்து 912 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
The post விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.