ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 2.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. ஒரு சில இடங்களில் அறுவடை பணி தொடங்கிய நடைபெற்றது. ஆனால், விவசாயிகளில் பலர் பொங்கல் பண்டிகை முடிந்து அறுவடை செய்யலாம் என நினைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி முதல் மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில், தேர்போகி, மண்டபம், தேவிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், இதேபோல களரி உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய திருஉத்தரகோசமங்கை சுற்றுவட்டாரப் பகுதிகள், வல்லக்குளம், சொக்கானை உள்ளிட்ட சிக்கல் சுற்றுவட்டார பகுதிகள், மீனங்குடி, ஆ.புனவாசல், ஆப்பனூர், ஒருவானேந்தல் உள்ளிட்ட கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகள், கீழச்சாக்குளம், செல்வநாயகபுரம், காக்கூர் உள்ளிட்ட முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக நெல்கதிர்களில் மணிகள் தற்போது முளைக்க தொடங்கியுள்ளன. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
The post ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் முளைத்த நெல்மணிகள்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.