நேட்டிவா விருது வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம்

3 days ago 1

`கூழாங்கல்' இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த எதிர்பார்ப்பை தொடர்ந்து, கடந்த கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி இப்படம் வெளியானது. சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் நடைபெற்ற 22-வது அமுர் இலையுதிர்கால சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி' திரைப்படத்திற்கு 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.


அல்டெர்நேட்டிவா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளில் வெளியான படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தமிழில் வெளியான கொட்டுக்காளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நேட்டிவா விருதைப் பெற்றுள்ளது.

சமூகத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாசார முறைகளில் இருக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டியிருப்பதாக நடுவர் குழுவினரின் பாராட்டுகளை கொட்டுக்காளி பெற்றுள்ளது.

We are extremely happy to share that our #Kottukkaali (The Adamant Girl) has won the NATIVA Award at the Alternativa Film Awards 2024, Indonesia.Our heartfelt gratitude to the entire team and everyone who supported us on this journey.@Siva_Kartikeyan @KalaiArasu_pic.twitter.com/BcJsvhyjCp

— Sivakarthikeyan Productions (@SKProdOffl) November 30, 2024
Read Entire Article