
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன் (வயது 23) கடந்த 18.4.2025 அன்று பாளையங்கோட்டை மார்க்கெட்ரோடு, வண்டிபேட்டை அருகே பாளையங்கோட்டை, கோட்டூர்ரோடு, முப்பிடாதி அம்மன் கோவில் மேலத் தெருவில் வசிக்கும் பிச்சையா மகன் அருண்பாபு என்பவரிடமிருந்து கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சங்கரநாராயணன், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இன்று (18.5.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.