
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 38) நேற்று முன்தினம் (16.5.2025) தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புடைய மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் வள்ளியூரை சேர்ந்த ஜெயக்குமார்(22) மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த முகமதுசபீர்(31) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.