நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

4 weeks ago 6

திருநெல்வேலி டவுண், தொட்டிபால தெருவைச் சேர்ந்த முன்னாள் எஸ்.ஐ. ஜாஹிர் உசேன் பிஜிலி நிலப் பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் 18-ம்தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி(எ) முகம்மது தௌபிக் போலீசாரால் சுட்டு கைது செய்யப்பட்டார். இதுவரை தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருன்நிஷா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக, பொது இடத்தில் வெட்டி கொலை செய்த வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சங்கரன் மகன் கிருஷ்ணமூர்த்தி(எ) முகம்மது தௌபிக் (வயது 35), மகபூப்ஜான் மகன்கள் அக்பர்ஷா (வயது 33), பீர்முகம்மது (வயது 37), சங்கரன் மகன் கார்த்திக்(எ) அலிஷேக் (வயது 32) ஆகிய 4 பேரும், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் கீதா (மேற்கு), வினோத் சாந்தாராம் (கிழக்கு), மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் அஜுகுமார் (டவுண் சரகம்), சரவணன் (மேலப்பாளையம் சரகம்), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நெல்லை டவுண் (பொறுப்பு) ஜூடி, பெருமாள்புரம் செல்வகுமார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி கிருஷ்ணமூர்த்தி(எ) முகம்மதுதௌபிக் ஏப்ரல் 17-ம் தேதியும் மற்ற 3 நபர்கள் ஏப்ரல் 16-ம் தேதியும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். 

Read Entire Article