
நெல்லை மாவட்டம், கூடங்குளம், செட்டிகுளம் கீழ பேருந்து நிலையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 30) என்பவரும் ஜென்சி(25) என்பவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தினேஷ் ஜென்சியிடம் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் 5.5.2025 அன்று ஜென்சி தனது அம்மா வீட்டிலிருந்து தினேஷின் வீட்டிற்கு சென்று ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் ஜென்சியை பெண்ணென்றும் பாராமல் அவதூறாக பேசி பைக் சாவியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜென்சி கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சூசையம்மாள் கிருபா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தினேஷை 6.5.2025 அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.