
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியில் நேற்று (2.5.2025) பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே ஒரு தனியார் பல்க் எதிரில் நின்று கொண்டிருந்த தாழையூத்து, சங்கர்நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ஐயப்பன் (வயது 58) என்பவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 13 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.