நெல்லையில் செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் கைது

3 hours ago 2

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி பகுதியில் சாத்தான்குளம், கோமனேரியைச் சேர்ந்த சேர்மத்துரை (வயது 54) என்பவர் கோதாநகர் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த (பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய) 2 நபர்கள் சேர்ந்து சேர்மதுரையை வழிமறித்து அவதூறாக பேசி, செல்போனை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சேர்மதுரை சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிவந்திபட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்தியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தூத்துக்குடி மாவட்டம், அனவரதநல்லூரை சேர்ந்த நம்பி சுபாஷ்(25) மற்றும் செய்துங்கநல்லூரை சேர்ந்த செல்வம்(29) என தெரிய வந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் 2 வாலிபர்களையும் இன்று கைது செய்து, வழிமறித்து பறித்துக் கொண்ட செல்போனை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

Read Entire Article