
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் நேற்று (17.5.2025) மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜ் தலைமையில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது முருகன்குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யனார் (வயது 42) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்தனர்.