நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

12 hours ago 2

நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி, முத்தூர், மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பூலையா மகன் கணேசன் (வயது 44). இவர் பூர்வீக சொத்து பிரச்சினை காரணமாக தனது தந்தையான பூலையாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனை மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் (1.4.2025) பூலையா தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கணேசன், பூலையாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக சிவந்திபட்டி காவல் துறையினர் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் கணேசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், கணேசன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று (2.5.2025) அடைக்கப்பட்டார்.

Read Entire Article