நெல்லை மண்டல கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர்ப்பு முகாம்

6 months ago 15

நெல்லை, நவ.11: நெல்லை மண்டல கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர்ப்பு முகாம் திருநெல்வேலி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து கடந்த 8ம் தேதி நடந்தது. முகாமினை நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், திருநெல்வேலி சரக துணைப்பதிவாளர் சுப்பையா, சேரன்மகாதேவி சரக துணைப்பதிவாளர் ராஜேஷ் மற்றும் துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் மாடசாமி ஆகியோரால் முகாம் துவக்கி வைக்கப்பட்டது.மேலும் கூட்டத்தில் இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ஜெனார்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் பெறப்பட்ட மனுக்களை சட்ட விதிகள் அரசாணை மற்றும் பதிவாளர் கடிதங்கள் சுற்றறிக்கைகளுக்கு உட்பட்டு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை மண்டல கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article