தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 4 ஆண்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு 53,333 குடியிருப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

2 hours ago 3

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, குறும்படத்தினை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அமைச்சர் தலைமையில் சட்டபேரவை அறிவிப்புகள் மற்றும் வாரிய பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
அரசு பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டில் ரூ.3,490.35 கோடி மதிப்பீட்டில் 65 திட்டப்பகுதிகளில் 22,719 குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட திட்டங்களில், பல பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.5,418.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த 47,419 அடுக்குமாடி குடியிருப்புகளின் பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள் முதல்வரின் உத்தரவின்படி மகளிர் பெயரில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கி அவர்களை சமூகத்தில் மதிப்புமிக்கவர்களாக மாற்றியுள்ளது.

பழுது பார்ப்பது மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை புனரமைக்கப்பட வேண்டி உள்ளது. எனவே, தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், வாரிய செயலாளர் காளிதாஸ், வாரிய தலைமை பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, லால் பகதூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 4 ஆண்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு 53,333 குடியிருப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article