நெல்லை, தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

1 month ago 6

நெல்லை,

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும் எனவும், இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தென் தமிழகத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நெல்லையில் இன்றைய தினம் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதே போல், தென்காசியிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article