நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை

1 month ago 8

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஆங்காங்கே திடீர் மழையும் பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீர் மழை பெய்தது. நெல்லை, பாளையங்கோட்டையில் இரவு 1.15 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. 30 நிமிடங்கள் வரை பலத்த மழையாக பெய்தது.இதே போல் மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் மற்றும் ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. ஆனால் பலத்த மழை பெய்த போதிலும் நேற்று பகல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மழை பெய்த சுவடே தெரியாத அளவுக்கு வெயில் பாதிப்பு காணப்பட்டது.

Read Entire Article