
தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்த நிலையில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.