'மார்கோ' நடிகையின் 'கிங் ஜாக்கி குயின்' பட டீசர் வெளியீடு

5 hours ago 2

சென்னை,

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யுக்தி தரேஜா. இவர் கடந்த 2023-ம் அண்டு வெளியான 'ரங்கபலி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டான 'மார்கோ' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் அறிமுக இயக்குனர் கேகே இயக்கும் 'கிங் ஜாக்கி குயின்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தீக்சித் ஷெட்டி மற்றும் சக்சி ஒடெலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் நானி வெளியிட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல் கிரண் அப்பாவரம் நடிகும் "கே-ராம்ப்" படத்திலும் யுக்தி தரேஜா நடித்து வருகிறார்.

Read Entire Article