நெல்லை கொலை: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

4 weeks ago 7

சென்னை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார்.அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்றது.நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் ,இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பபு பணியில் கவன குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Read Entire Article